சமாஜ்வாதி கட்சி வளர்ந்துள்ளதாகவும் தாங்கள் நிச்சயமாக 2022ஆம் ஆண்டு மாநிலத்தில் ஆட்சியை அமைப்போம் என்றும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி கூறியிருந்தார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுர்யா, நாட்டு மக்களுக்காக பணியாற்றும் பாஜக அரசு இங்கு உள்ளது. இந்த அரசே அடுத்த வரும் ஐம்பது ஆண்டுகளும் ஆட்சியில் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.