தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அடிப்படை உரிமைகள் தொடர்பாக வழக்கு நடத்தி வெற்றிகண்ட எட்னீர்  மடாதிபதி காலமானார்

திருவனந்தபுரம்: அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை பாதுகாக்கும் விதமாக வழக்கு நடத்தி வெற்றிகண்ட கேரள எட்னீர் மடத்தின் மடாதிபதி கேசவனந்தா பாரதி, உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

Kesavananda Bharati died  basic structure of Constituition  Key petitioner  Kasargod , Kerala seer  கேசவனந்தா பாரதி
கேசவனந்தா பாரதி உயிரிழப்பு

By

Published : Sep 6, 2020, 5:14 PM IST

சுவாச கோளாறு, உடல் நலக்குறைவு காரணமாக மங்களூருவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எட்னீர் மடத்தின் மடாதிபதி கேசவனந்தா பாரதி இன்று (செப்.06) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 79. எட்னீர் மடத்தின் மடாதிபதியாக இருந்துவந்த அவர், கர்நாடாக இசை பயிற்றுநராகவும், அத்வைத கருத்துகளை பரப்புபவராகவும் இருந்தார். இவரின் மறைவிற்கு பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சில தசாப்தங்களுக்கு முன்பு கேரள அரசு நில சீர்த்திருத்தச் சட்டத்தின் கீழ் எட்னீர் மடத்தின் நிலங்களை கையகப்படுத்தியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கின் தீர்ப்பு, "சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் அரசியலமைப்பைத் திருத்தக்கூடிய அதிகாரம் இருக்கிறது. அதே நேரத்தில் அடிப்படை கட்டமைப்பு அல்லது முக்கிய அம்சங்களை திருத்தவோ நீக்கவோ முடியாது" என அளிக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்புதான் இன்றும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புகளை தகர்க்கப்படாமல் உள்ளதற்கு முக்கிய காரணம்.

எட்னீர் மடத்தின் மடாதிபதி கேசவனந்தா பாரதி உயிரிழப்பு

உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதிக நாட்கள் (68 நாட்கள்) விசாரிக்கப்பட்ட வழக்காக இதுவே இருக்கிறது.

இதையும் படிங்க:சைவ மடத்திற்கு தலைமையேற்கும் இஸ்லாமியர் - அசத்தும் கர்நாடகா

ABOUT THE AUTHOR

...view details