திருவனந்தபுரம் (கேரளா): வெளிநாட்டினருக்கும், இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் எப்போதும் சொர்க்கமாகத் திகழும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரையை, தளர்வளித்து திறந்திருந்தாலும் வெறிச்சோடியே காணப்படுகிறது.
தற்போது, கோவளத்திற்கு திருவனந்தபுரம் நகரைச் சேர்ந்த சிலரும், அண்டை மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் மட்டுமே வருகின்றனர். கோவிட் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின்னரும் வெளிநாட்டினர் கோவளம் கடற்கரைக்கு வருவதில்லை.
கோவிட் பொதுமுடக்கத்தின்போது, கேரளாவில் சிக்கிக் கொண்ட ஒரு சிலர் மட்டும் கோவளம் கடற்கரையில் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்க முடியும். அதேபோல், மாலைப் பொழுதில் உள்ளூர்வாசிகள் மட்டும் பொழுதை கழிக்கவருகின்றனர்.