கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (66). இவரின் கணவர் கிருஷ்ண அய்யர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, லட்சுமி அம்மாளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கிருஷ்ண அய்யரின் உதவியாளர் கோச்சனியான் (67) செய்துவந்தார்.
இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே பேரன்பு அதிகரிக்க, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால், திடீரென லட்சுமி அம்மாளை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு கோச்சனியான் மாயமானார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, இரு மாதங்களுக்கு முன்பு லட்சுமி அம்மாளை தேடி மீண்டும் மதியோர் இல்லத்திற்கு கோச்சனியான் சென்றுள்ளார். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். சிறப்பான முறையில் நடைபெற்ற இவர்களின் திருமண விழாவில் அம்மாநில அமைச்சர் சுனில் குமார் கலந்துகொண்டார். திருமண விழாவின் ஒரு அங்கமாக மணப்பெண்ணுக்கு மெஹந்தி வைக்கும் விழாவும் நடைபெற்றது.
முதியோர் இல்லத்தில் நடைபெற்ற திருமணம் பின்னர், அவர்களை வாழ்த்தி அமைச்சர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது. இந்த திருமண விழாவில் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தேசிய குடிமக்கள் பதிவேடு: அரசு மீது ராகுல் கடும் தாக்கு!