பழங்குடியின் மக்களுக்கான பஞ்சாயத்து கேரளா மாநிலம் இடிக்கி மாவட்ட இடமலைக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே பழங்குடியின மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட முதல் பஞ்சாயத்து இதுவாகும். கிராம நிர்வாகத்திற்கான அலுவலகமும் இங்கு கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளது. இங்குள்ள பழங்குடியின் மக்கள் இதுநாள் வரை தேவிகுளம் பஞ்சாயத்தையே நம்பி இருக்கவேண்டிய நிலை இருந்தது.
கேரளாவில் முதல் பழங்குடியின பஞ்சாயத்து அமைப்பு - தேவிகுளம் பஞ்சாயத்து
பழங்குடியின மக்களுக்காக முதல் பஞ்சாயத்து அலுவலகம் கேரளா மாநிலம் இடிக்கி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
Kerala
இந்த அலுவலகம் ஜனவரி 30ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது என்றும், தேவிகுளம் பஞ்சாயத்தின் கீழ் இடமலைக்குடி பஞ்சாயத்து அலுவலகமும் செயல்படும் என்று இடிக்கி மாவட்ட ஆட்சியர் திணேசன் தெரிவித்துள்ளார். மேலும் பஞ்சாயத்து அலுவலகத்தின் கிளை அமைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குப்பைக் கிடங்கில் வசிப்பிடம்... அரசு சலுகைகள் மறுப்பு - துயரத்தில் வாழும் பளியர் பழங்குடி மக்கள்