சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்த வைரஸின் பாதிப்பு இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது.
நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 873 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வேளையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு துபாய் நாட்டிலிருந்து மார்ச் 18ஆம் தேதி வந்த ஒருவர் கொச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மார்ச் 22ஆம் தேதியன்று தான் இவருக்கு கரோனா பாதிப்புள்ளது உறுதியானது. இதனையடுத்து, இன்று அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். கேரள மாநிலத்தில் கரோனா நோய்க் கிருமித் தொற்றின் காரணமாக ஏற்பட்ட முதல் மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...கரோனா பாதிப்பிற்கு அதிகமாக நிதி ஒதுக்கிய தஞ்சாவூர் எம்.பி.யுடன் ஒரு உரையாடல்!