தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெற்ற குழந்தையை கொலைசெய்த தாய்! - கேரளாவில் பச்சிளம் குழந்தை கொலை

கண்ணூர்: தனது கணவருடனான பிரச்னை காரணமாக தனது ஒன்றரை வயது சிறுவனைக் கொன்றதை ஒப்புக்கொண்ட 21 வயது பெண் கேரளாவின் கண்ணூரில் உள்ள தாயில் கடற்கரைக்குச் சாட்சியங்களைச் சேகரிக்க அழைத்துச் செல்லப்பட்டார்.

Kerala toddler murder
Kerala toddler murder

By

Published : Feb 19, 2020, 11:34 PM IST

திங்கள்கிழமை அன்று காணாமல்போன குழந்தையின் சடலம் அங்குள்ள ஒரு கடற்கரையில் மீட்கப்பட்டது. குழந்தையை கடலுக்கு அருகேயுள்ள பாறைகளுக்கு இடையில் வீசியதை குழந்தையின் தாய் ஒப்புக்கொண்டதையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு சிறுவனின் தந்தை, தனது குழந்தையைப் பார்க்க வந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட அவரை சம்பவ இடத்தில் ஆதாரங்களைச் சேகரிக்க காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். அதையடுத்து மீண்டும் நகர காவல் நிலையத்தில் காவலில் வைத்தனர்.

குழந்தை காணாமல்போனதைத் தொடர்ந்து, பெற்றோரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர்களின் வாக்குமூலங்கள் முரண்பாடாக இருந்தது. அதைத்தொடர்ந்து பொற்றோரிடம் தனித்தனியாக காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் குழந்தையை கொன்றதாகத் தாய் ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையில், குழந்தையை கொன்ற தாயின் மீது உள்ளூர்வாசிகள் தாக்குதல் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "அந்தப் பெண் முதலில் குழந்தையைத் தூக்கி எறிந்தார், ஆனால் குழந்தை மீண்டும் அழத் தொடங்கியது. இதனால், அவர் கடற்கரை அருகேவுள்ள பாறைகளுக்கு இடையே குழந்தையை மீண்டும் வீசியுள்ளார்" என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

பாறைகளுக்கு இடையே குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதும், உறவினர்கள் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர். தலையில் ஏற்பட்ட காயத்தால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உடற்கூறாய்வில் தெரியவந்தது.

இதையும் படிங்க: ரயிலில் மதத்தின் பெயரில் யாருக்கும் முன்பதிவு இல்லை - பியூஷ் கோயல்

ABOUT THE AUTHOR

...view details