தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாணயத்தை விழுங்கிய சிறுவன்... கரோனா அச்சத்தால் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மறுத்ததால் உயிரிழப்பு! - Kerala latest news

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நாணயத்தை விழுங்கிய மூன்று வயது சிறுவனுக்கு கரோனா அச்சம் காரணமாக அரசு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்ததால் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Kerala toddler dies after swallowing coin
Kerala toddler dies after swallowing coin

By

Published : Aug 3, 2020, 11:46 AM IST

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் பிருத்விராஜ் என்பவர் சனிக்கிழமை நாணயத்தை தவறுதலாக விழுங்கிவிட்டார்.

இதைக் கவனித்த அவரது பெற்றோர், அருகில் இருந்த அலுவா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு குழந்தைக்கு எக்ஸ்-ரே எடுக்கப்பட்டுள்ளது. நாணயம் சிறுவனின் வயிற்றின் சிறுகுடல் பகுதியில் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், வாழைப்பழம் கொடுத்தால் தானாக நாணயம் வெளியே வந்துவிடும் என்று பொற்றோரிடம் கூறியுள்ளனர்.

மேலும், சிறுவனின் உடல்நிலை மோசமானால் வேறுறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதைத்தொடந்து சிறுவனை எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுவனுக்கு சிகிச்சையளிக்க போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்று கூறிய மருத்துவர்கள், வந்தந்தம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் செல்லமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

வந்தந்தம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அச்சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொண்ட அச்சிறுவன் ஞாயிற்றுக்கிழமை காலை (ஆக.2) பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர்கள் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து சென்றதாலேயே, சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஒரு துரதிஷ்டமான நிகழ்வு என்று குறிப்பிட்ட அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மனைவியை கொன்ற கரோனா நோயாளி ஆம்புலன்ஸிலிருந்து தப்பியோட்டம்!

ABOUT THE AUTHOR

...view details