தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேளாண் சட்டங்கள் : சிறப்பு சட்டப்பேரவை அமர்வை நடத்தவுள்ள கேரள அரசு முடிவு! - முதலமைச்சர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம் : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற டிச.23ஆம் தேதி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது.

வேளாண் சட்டங்கள் : சிறப்பு சட்டப்பேரவை அமர்வை நடத்தவுள்ள கேரளா முடிவு!
வேளாண் சட்டங்கள் : சிறப்பு சட்டப்பேரவை அமர்வை நடத்தவுள்ள கேரளா முடிவு!

By

Published : Dec 21, 2020, 6:36 PM IST

டெல்லியில் நடைபெற்றுவரும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் குறித்தும், சர்ச்சைக்குரிய மூன்று புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்க கேரள அமைச்சரவையின் கூட்டம் இன்று (டிச.21) நடந்தது.

முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் தொடர்பில் விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வேளாண் சட்டங்கள் : சிறப்பு சட்டப்பேரவை அமர்வை நடத்தவுள்ள கேரள அரசு முடிவு!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு மாற்றானச் சட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக இந்த மாதம் 23 ஆம் தேதி சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானை அமைச்சரவை அணுக தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க :மேற்கு வங்கத் தேர்தல் குறித்து பிரசாந்த் கிஷோர்-பாஜக வார்த்தைப் போர்

ABOUT THE AUTHOR

...view details