1986ஆம் ஆண்டு சுற்றுச்சுழல் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக இதுதொடர்பான கூட்டம் மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்த தடை வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இதனால் கேரளத்தில் நெகிழி தாள்கள், குளிரூட்டும் படங்கள் (cooling films), தட்டுகள், கோப்பைகள், நெகிழி கரண்டிகள் மற்றும் ஸ்டைரோஃபோம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அலங்காரத் துண்டுகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட காகிதக் கோப்பைகள், கொடிகள், நீர் ஆகியவை தடை செய்யப்படுகின்றன.
அதே நேரத்தில், ஏற்றுமதிக்கு ஒதுக்கப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள் மற்றும் சுகாதாரத் துறையில் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்கள் ஆகியவை தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.