தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவர்கள் பரப்புரை - Kerala Students Chained Together In A Fight Against Climate Change Issues

திருச்சூர்: பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப் பள்ளி மாணவர்கள் ஐந்தாயிரம் பேர் இணைந்து பரப்புரை மேற்கொண்டனர்.

Fight Against Climate
Fight Against Climate

By

Published : Jan 2, 2020, 2:54 PM IST

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தெக்கின்காடு மைதானத்தில், பருவநிலை மாற்றத்துக்கு எதிராக பரப்புரை நடைபெற்றது. மாணவி ரிதிமா பாண்டே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், லட்சத்தீவைச் சேர்ந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 20 சுற்றுச்சூழல் அமைப்பினர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாணவி ரிதிமா பாண்டே பேசுகையில், உலக சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு எதிராக நாம் ஒற்றிணைந்து போராடுவோம். பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களில் அக்கறை உள்ள மாணவர்கள் என்னுடன் இணையலாம் என்றார்.

Fight Against Climate

அதன்பின் இந்தப் பரப்புரையின் ஒருபகுதியாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைக்கோத்து மனிதச் சங்கிலிப் பேரணி மேற்கொண்டனர். அப்போது, பருவநிலை மாற்றத்துக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details