சீனாவில் 2016ஆம் ஆண்டு டிக் டாக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. டிக் டாக் வந்த பிறகு ஒவ்வொருவரின் தனித்திறமையும் தெரிய வந்துள்ளது. முக்கியமாக குடும்ப பெண்கள் தொலைக்காட்சியில் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டு தினமும் ஒரு வீடியோவை டிக் டாக்கில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த செயலியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் இணைந்து காமெடி கலந்த வீடியோவை வெளியிடுகின்றனர்.
கைதியுடன் குத்தாட்டம் போடும் மலபார் போலீஸ் - prison
கேரளா: கைதியுடன் கேரள காவல்துறையினர் டிக் டாக்கில் நடனம் ஆடும் வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டிக் டாக் செயலியில் ஆபாசக் காட்சிகளும், உயிரிழப்புகள் நடக்கின்றன. சமூகத்தை சீர்கெடுக்கும் வகையில் டிக் டாக் வளர்ச்சி இருப்பதால் சமூக ஆர்வலர்கள் இதனை தடை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், கேரளாவில் மூன்று காவல்துறையினர் கைதி ஒருவருடன் டிக் டாக்கில் மலையாள பாட்டிற்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளனர். முதலில் கைதி ஆடும்போது காவலர்கள் அவரை முறைத்து பார்ப்பார்கள்.
இதனையடுத்து அவருடன் சேர்ந்து நடனம் ஆடுகின்றனர். இதுபோன்று பல வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பணியில் இருக்கும்போது காவல்துறையினர் நடனம் ஆடிய வீடியோ, கேரள காவல்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து மூன்று காவல்துறையினர் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.