தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடலில் குதித்த குற்றவாளி! - ஆதாரங்கள் சேகரிப்பு

திருவனந்தபுரம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டுவந்த நபர் ஒருவர் கடலில் குதித்து தப்பிக்க முயன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

kerala-pocso-case-accused-jumps-into-sea-to-escape-hunt-on
kerala-pocso-case-accused-jumps-into-sea-to-escape-hunt-on

By

Published : Jul 22, 2020, 4:33 PM IST

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தையடுத்து காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ். இவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கியதாக சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரையடுத்து நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்காக இவரை காவல் துறையினர் கசாபா கடற்கரைப் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரித்து வந்தனர்.

அப்போது, காவலர்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் மகேஷ் கடலில் குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். இவரை மீட்க இரண்டு காவலர்கள் கடலில் குதித்து தேடி வந்தும் அவரை கண்டறிய முடியவில்லை.

இதையடுத்து காசர்கோடு காவல் துறையினர், மகேஷை மீட்க நீச்சல் வீரர்களை அழைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details