கேரள பண மோசடி வழக்கு, தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் ஒன்றாக விசாரிக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.
கேரளாவில் ஜூலை 5ஆம் தேதி பதினைந்து கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர். இந்தக் கடத்தல் சம்பந்தமாக கேரள முதலமைச்சரின் மாநில தகவல் தொழில்நுட்ப முன்னாள்செயலர் சிவசங்கர் கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சிவசங்கரிடம் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை நடைபெற்றது. சிவசங்கரை கைதுசெய்த அமலாக்கத் துறை, அவரை அக். 28ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிபெற்றது. நீதிமன்றம், சிவசங்கரிடம் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை மட்டுமே விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த விசாரணையில் புதிய முன்னேற்றம், வெளிப்பாடுகள் குறித்து அமலாக்கத் துறை பரிசீலித்துவருகிறது. இதற்கிடையில், இரண்டாவது நாளாக சிவசங்கரிடம் விசாரணை தொடர்ந்தது.