தமிழ்நாடு

tamil nadu

கேரளாவில் காதல் ஜோடி மீது வழக்குப்பதிவு

By

Published : Apr 9, 2020, 1:16 PM IST

கோழிக்கோடு: கேரளத்தில் முழு அடைப்பு உத்தரவை மீறியதாக காதல் ஜோடி மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Interfaith Couple  Kerala  Thamaraserry  Missing Complaint  Lockdown Violation  Case Registered  Police  Elope  கேரளாவில் காதல் ஜோடி மீது வழக்குப்பதிவு  காதல் ஜோடி மீது வழக்குப்பதிவு  வழக்குப்பதிவு
Interfaith Couple Kerala Thamaraserry Missing Complaint Lockdown Violation Case Registered Police Elope கேரளாவில் காதல் ஜோடி மீது வழக்குப்பதிவு காதல் ஜோடி மீது வழக்குப்பதிவு வழக்குப்பதிவு

கேரள மாநிலம் கோழிக்கோடு தாமரச்சேரியை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர், 24 வயதான இளைஞரை காதலித்துவந்தார். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இருவரும் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை மீட்டனர்.

இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், இருவரும் 18 வயதை பூர்த்தியடைந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவர்கள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள முழுஅடைப்பு விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறியதற்காக ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள வகையில் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கான காரணம் முக்கியமானதோ, அவசரமானதோ அல்ல என்று கூறி வீட்டிலிருந்து வெளியேறிய காதல் ஜோடிக்கு எதிராக பதியப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.

இந்த காதல் ஜோடி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188ஆவது பிரிவு (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாமை) மற்றும் பிரிவு 269 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ள கவனக்குறைவான செயல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: இந்தியாவில் உயிரிழந்த முதல் மருத்துவர்

ABOUT THE AUTHOR

...view details