தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் சளி, காய்ச்சல் இருக்கும் கைதிகளுக்கு தனி அறை ஒதுக்கீடு! - kerala corona virus

திருவனந்தபுரம்: மாநிலம் முழுவதும் சிறையில் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் கைதிகளைத் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைக்குமாறு சிறைச்சாலைகளின் இயக்குநர் ஜெனரல் ரிஷி ராஜ் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கேரளா
கேரளா

By

Published : Mar 10, 2020, 2:18 PM IST

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அறிகுறிகள் இருக்கும் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.

அந்த வகையில், சிறைச்சாலைகளின் இயக்குநர் ஜெனரல் ரிஷி ராஜ் சிங் அனைத்து சிறைச்சாலை அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், "காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் கைதிகளைத் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைக்க வேண்டும்.

புதிய கைதிகளைச் சிறையில் தனித்துவமான அறையில் அடைத்து ஆறு நாள்கள் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். பரோலுக்குப் பின் திரும்பிவரும் கைதிகளையும் ஒரு தனி அறையில் தங்கவைத்து கண்காணிக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் அச்சத்தால் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் தற்காலிமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கொரோனா எதிரொலி: தனிமைப்படுத்தும் மையத்தை தயார்படுத்த உள்துறை அமைச்சகம் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details