கரோனாவுக்கு எதிராக கேரள மாநிலம், 'பிரேக் தி செயின்' என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் எடுத்து வருகிறது. அந்த வகையில், கேரளா கார்ட்டூன் அகாதமி சார்பில், பிரபலமான கார்ட்டூனிஸ்டுகள் ஒன்றிணைந்து, கரோனா விழிப்புணர்வு முகாமை நடத்தினர். இதனை அம்மாநில சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் 'எஸ்.எம்.எஸ்' என்பது மையப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கு சானிடைசர் (அ) சோப்பு (S), முகக்கவசம் (m), தகுந்த இடைவெளி (social distancing) என்பது விரிவாக்கமாகும்.
இது குறித்து, சமூகப் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக இயக்குநர் முகமது ஆஷீல், 'கரோனா விழிப்புணர்வு கார்ட்டூன் ஓவியங்கள் வரைய 14 மாவட்டங்களில் உள்ள 14 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இது முதல் கட்ட நடவடிக்கை. அடுத்தகட்டமாக 28 நகரங்களில் வரைய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது'என்றார்.