தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2000 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட கேரள நிதி நிறுவனம் - சிபிஐக்கு கைமாறும் வழக்கு!

திருவனந்தபுரம் : கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கின் விசாரணையை, சிபிஐயிடம் ஒப்படைக்க அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

eral
erala

By

Published : Sep 16, 2020, 6:50 PM IST

கேரளாவில் சுமார் 247 கிளைகளுடன் ’பாப்புலர் பைனான்ஸ்’ என்ற பெயரில் பிரபல நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு வட்டி வழங்காமல் ஏமாற்றி வருவதாக பல புகார்கள் ஏழுந்த நிலையில், காவல் துறையினர் இது குறித்த விசாரணையைத் தொடங்கினர்.

சுமார் 2000 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படும் இவ்வழக்கில், நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தாமஸ் டேனியல், அவரது மனைவியும் பங்குதாரருமான பிரபா இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கு அமலாக்கத் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று (செப்.16), இவ்வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு, இவ்வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கான விருப்பத்தை மத்திய அரசிற்கு ஏற்கனவே கடிதம் மூலம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தது.

இதையடுத்து நீதிபதி, ”பாப்புலர் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் அனைத்துக் கிளைகளும் மூடப்பட வேண்டும். நிறுவனம் இருப்பில் வைத்துள்ள பணம், தங்கம் ஆகியவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சிறை கண்காணிப்பாளர் மூலம் சம்மன் வழங்கப்படவுள்ளது. இவ்வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.

மேலும் இது குறித்துசிபிஐ ஆலோசகர்பேசுகையில், "இவ்வழக்கில் பொருளாதாரக் குற்றங்களை விசாரிக்கும் திறமையும் அனுபவமும் கொண்ட அலுவலர்களை ஈடுபடுத்தி விசாரணைக் குழுவை அமைத்திட வேண்டும். இவ்விசாரணைக்கு கேரள அரசு தங்களது முழு ஒத்துழைப்பை உறுதி செய்ய வேண்டும்” என்றும் கோரினார். இவ்வழக்கு வரும் அக்டோபர் 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details