கேரள மாநிலம், கொச்சினில் தொடங்கிய இரண்டு நாள்கள் வணிக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு அதனைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
'நாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகளை கலைந்து சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று பேசி வருகிறோம். அப்படியிருக்க தொழிற்சாலைகளில் இரவுப் பணிகளில் பெண்கள் வேலை செய்ய தடையிருப்பது எப்படி ஏற்புடையதாகும்?' என்று கேள்வியெழுப்பியவர், ' ஆண்கள் இரவுப் பணியில் வேலை பார்க்க முடியும் என்றால், ஏன் பெண்களால் பார்க்க முடியாது? ' எனவும் வினவினார்.
'ஆகையால் பெண்களுக்கும் இனிமேல் இருந்து தொழிற்சாலைகளில், இரவு 7 மணியிலிருந்து காலை 6 மணிவரை வேலை பார்க்கலாம். இது பெண்கள் முன்னேற்றத்திற்கு மேலும் வழிவகுக்கும்' என்றார்.