கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வியாழக்கிழமை (ஜூன்25) செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறுகையில், “தென் மாநிலங்களில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
ஆகவே பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். தங்களின் பயண விவரங்கள் பற்றி தகவல்களை சேகரித்து அதனை குறித்துக்கொள்ள வேண்டும்.
அந்தக் குறிப்பில் பயணம் செய்த இடங்கள், பயணம் செய்த வாகனம், வாகன எண், நேரம், பார்வையிட்ட ஹோட்டல் அல்லது கடைகளின் பெயர் உள்ளிட்ட தகவல்களையும் குறிப்பெடுத்து கொள்ள வேண்டும்.
இது கரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்புகளை கண்டறிய உதவும். ஜூன் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை, “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் மாநிலத்துக்குள் 154 விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.