தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேளிக்கை வரியில் சலுகைகளை அறிவித்த கேரள அரசு - pinarayi vijayan government

மார்ச் 31, 2021 வரை கேளிக்கை வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சொத்து வரியை தவணை முறையில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேளிக்கை வரி
கேளிக்கை வரி

By

Published : Jan 11, 2021, 7:54 PM IST

திருவனந்தபுரம்: திரையரங்குகளுக்கான கேளிக்கை வரியில் சில தள்ளுபடிகளையும் தளர்வுகளையும் கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரள பிலிம் சேம்பர் உறுப்பினர்களுடனான கலந்தாலோசனைக்கு பின்பு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேளிக்கை வரியில் சில தள்ளுபடிகளையும் தளர்வுகளையும் அறிவித்தார்.

அதன்படி, மார்ச் 31, 2021 வரை கேளிக்கை வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சொத்து வரியை தவணை முறையில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரையரங்கம் மூடப்பட்டிருந்த கடந்த 10 மாத காலத்துக்கான மின் கட்டணத்தை 50 சதவிகிதமாக குறைத்து, மீதப் பணத்தை தவணை முறைகளில் கட்டவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற சலுகைகள் திரைத்துறை மட்டுமல்லாமல், இன்னும் பிற துறைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details