தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இது நெறிமுறைகளுக்கு மாறானது' - பினராயி விஜயனைச் சாடும் கேரள ஆளுநர் - கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முதலமைச்சரே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது நெறிமுறைகளுக்கு மாறானது எனக் கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சாடியுள்ளார்.

Arif
Arif

By

Published : Jan 16, 2020, 2:00 PM IST

Updated : Jan 16, 2020, 2:37 PM IST

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக இச்சட்டத்திற்கு எதிராக மேற்குவங்கம், கேரள அரசுகள் கடுமையாகப் போராடிவரும் நிலையில் கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிர்க்கட்சியான காங்கிரஸ் இரண்டும் ஒன்றுசேர்ந்து போராடிவருகின்றன.

பினராயியின் செயலுக்கு எதிர்ப்பு

இந்தச் சட்டத்திற்கு எதிராக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதற்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கடும் எதிர்ப்பை பதிவுசெய்தார்.

மாநில முதலமைச்சரே நேரடியாகச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வது அரசியல் சாசன நெறிமுறைக்கு எதிரானது எனவும், அனைவரும் சட்டவிதிமுறைகளுக்குள்பட்டு நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

உரிய நடவடிக்கை

சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாருமில்லை எனக்கூறிய ஆரிஃப், ஆளுநரிடம் தெரிவிக்காமல் அனுமதியின்றி முதலமைச்சர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறான முன்னுதாரணம் என எடுத்தியம்பினார்.

ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல என சொன்ன அவர், தனக்குள்ள பொறுப்புகளை சிந்தித்து தேவையான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொள்ளவுள்ளதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்திய அணியின் 87 வயது ரசிகை காலமானார் - பிசிசிஐ இரங்கல்

Last Updated : Jan 16, 2020, 2:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details