தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொடரும் தற்கொலைகள்.... மருத்துவர் பரிந்துரைத்தால் மது: கேரள அரசு! - மருத்துவர் பரிந்துரைத்தால் மது

திருவனந்தபுரம்: தொடர்ச்சியாக நிகழும் தற்கொலைகளால், மருத்துவரின் பரிந்துரைப்படி, மது வழங்க கேரள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கேரள முதலமைச்சர்
கேரள முதலமைச்சர்

By

Published : Mar 31, 2020, 9:51 AM IST

Updated : Mar 31, 2020, 12:31 PM IST

கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பிற மாநிலங்களில் இல்லாத அளவில் கேரள மாநிலத்தில், மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

திரிச்சூர் மாவட்டம் கொடுங்காளுரைச் சேர்ந்தவர் ஆற்றில் மூழ்கியும், கயம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஷேவிங் திரவத்தைக் குடித்தும் உயிரிழந்தனர். இதுபோன்று இன்னும் சிலரும் உயிரிழந்த நிலையில், மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மதுபோதைக்கு அடிமையானவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கவும் கலால் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். திடீரென மதுவுக்கு தடையென்பதால், சமூகத்தில் எழும் சிக்கல்களை சமாளிக்க இணையம் வாயிலாக மது விற்பனையை தொடரவும் அரசு பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார்.

கேரள அரசு எடுத்துள்ள இந்த முடிவை திரும்ப பெறுவது அறிவியல் பூர்வமானதல்ல என இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் உள்ளோம் - சுகாதாரத் துறை அமைச்சகம்

Last Updated : Mar 31, 2020, 12:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details