கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமையால் முக்கியக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மீது, சுங்கத்துறை அலுவலர்கள் புதிய வழக்கைப் பதிந்துள்ளனர். ஸ்வப்னா சுரேஷ் தனது அடையாள அட்டையை முறைகேடாகப் பயன்படுத்தி, ஐக்கிய அமீரகத்தில் உள்ள தூதரகத்திலிருந்து சட்டவிரோத பணப்பரிவரத்தனை மேற்கொண்டதாகக் கூறி இந்த வழக்கைப் பதிவுசெய்துள்ளனர்.
முன்னதாக, கேரளாவுக்குத் தங்கம் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டி தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை ஆகியவை ஸ்வப்பனா சுரேஷை காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்துவருகின்றன.