கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள தங்கக் கடத்தல் விவகாரம் தற்போது அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இவ்விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் தனக்குள்ள நெருக்கம் மூலம் இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் புகார் எழுந்துள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் தேசிய புலானய்வு முகமை (என்ஐஏ) ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ். சரித், சந்தீப் நாயர், பாசில் பரீத் ஆகியோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. மேலும், ஸ்வப்னா சுரேஷ் வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம், 982.5 கிராம் தங்கம் பறிமுதல் செய்துள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.