ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு வந்த பாா்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அலுவலர்கள் கண்டறிந்தனா்.
இதுதொடர்பான விசாரணையை கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமைக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்று(அக்.15) இவ்வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம், இவ்வழக்கில் சர்வதேச அளவில் விசாரணை நடத்திட வேண்டும் என்பதால், குற்றவாளிகளின் நீதிமன்றக் காவல் மேலும் 90 நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என்றும், இதுமட்டுமன்றி கேரள முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த எம். சிவ சங்கரை அக்டோபர் 23ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது எனவும் அமலாக்கத்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது.
மேலும், தங்கக் கடத்தல் வழக்கில் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டதைத்தொடர்ந்து, சிறையிலிருக்கும் ஸ்வப்னா, சரீத் ஆகிய இருவரும் பிணை மனுவை வாபஸ் பெற்றனர்.