தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தங்கக் கடத்தல்: முன்னாள் தலைமைச் செயலரிடம் 9 மணி நேர விசாரணை!

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் குறித்து அம்மாநில முன்னாள் தலைமைச் செயலர் சிவசங்கரிடம் 9 மணி நேரத்திற்கும் மேலாக தேசியப் புலனாய்வு முகமை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

Gold Smuggling Case  Kerala  M Sivasankar  NIA  Sarith PS  Swapna Suresh  கேரளா தங்கக் கடத்தல்  பினராயி விஜயன் முதன்மை தலைமைச் செயலர்
தங்கக் கடத்தல்: முன்னாள் தலைமைச் செயலரிடம் 9 மணி நேர விசாரணை

By

Published : Jul 15, 2020, 12:19 PM IST

கேரளாவிலுள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சலில் தங்கம் கடத்தப்படுகிறது என்ற ரகசியத் தகவல் வந்ததும் சில நாட்களுக்கு முன்பு விமான நிலையத்தில் சுங்க அலுவலர்கள் சோதனையை தீவிரப்படுத்தினர். இதன் விளையாக 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்தக் கடத்தலில் பல முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என தொடக்கம் முதலே கூறப்பட்டு வந்தது.

இந்தச் சூழ்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சரிதா பிஎஸ் ஆகியோருடன் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிவந்த முன்னாள் தலைமைச் செயலர் சிவசங்கரிடம் தேசியப் புலனாய்வு முகமை அலுவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

நேற்று (ஜூலை 14) மாலை 5 மணியளவில் சுங்கத்துறை அலுவலகத்துக்கு வந்த அவரிடம் இன்று (ஜூலை 15) அதிகாலை 2.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கேரளாவில் மூத்த ஆட்சிப் பணியாளர் ஒருவர் நீண்ட நேரம் விசாரிக்கப்பட்டது இதுவே முதல்முறை.

தகவல்தொடர்புத் துறை செயலராக சிவசங்கர் பணியாற்றியபோது, ஸ்வப்னா சுரேஷுக்கு கீழ் பணியாற்றியுள்ளார். முன்னதாக அமீரக அலுவலகத்தில் பணியாற்றிய இவரை தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்ற நியமித்தது சிவசங்கர் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; ஸ்வப்னாவுக்கு எப்படி அரசு வேலை கிடைத்தது?

ABOUT THE AUTHOR

...view details