தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை விசாரிக்க சுங்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பெங்களூரு போதைப்பொருள் விவகாரத்திலும் தொடர்புடையதாகக் கருதப்படுவதால், அவர்களை சுங்கத்துறை அலுவலர்கள் விசாரிக்க கொச்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை விசாரிக்க சுங்கத் துறையை நீதிமன்றம் அனுமதிக்கிறது
கேரள தங்கக் கடத்தல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை விசாரிக்க சுங்கத் துறையை நீதிமன்றம் அனுமதிக்கிறது

By

Published : Sep 7, 2020, 11:04 PM IST

கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5ஆம் தேதி அரசாங்கப் பொருட்களின் வழியாக முறைகேடாக தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் நாட்டின் பேசுபொருளாக மாறியது. இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினரால் (என்.சி.பி) கைது செய்யப்பட்ட முகமது அனூப்புடன், கேரள தங்கக் கடத்தல் வழக்கில் காவலில் உள்ள ரமீஸ் கே.டிக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போதைப்பொருள் விவகாரத்தில் கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரமீஸ் உள்ளிட்ட ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவதற்காக கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் காவலில் உள்ள ரமீஸ் கே.டி, முகமது ஷஃபி, ஹம்ஜாத் அலி, சைதலவி, அப்து பி.டி மற்றும் ஹம்சத் அப்துசலம் ஆகிய ஆறு பேரை சிறையில் விசாரிக்க சுங்கத் துறைக்கு கூடுதல் தலைமை நீதித்துறை நீதிமன்றம் (பொருளாதார குற்றங்கள்) அனுமதி அளித்தது.

இந்த கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ், சரித் பி.எஸ், மற்றும் சந்தீப் நாயர் ஆகிய மூன்று பேரின் நீதிமன்றக் காவலை பணமோசடி தடுப்புச் சட்டம் பிரிவில் கொச்சி சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details