இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய கேரள எதிர்க்கட்சித் தலைவரும், அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ரமேஷ் சென்னிதலா, "தங்கக் கடத்தல் வழக்கில் பிரதான குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் கேரளாவிலிருந்து தப்பித்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்தது நாடறிந்த உண்மை.
அண்மையில், நாட்டையே உலுக்கிய போதைப் பொருள் மாஃபியாவும் அங்கிருந்தே இயங்கியதாக தெரிகிறது. இதன் மூலமாக இவற்றுக்கு இடையே நெருங்கிய தொடர்புகள் உள்ளன என்பது மிகத் தெளிவாக அறியலாம். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அனூப் முகமதை தனக்கு தெரியும் என்று சிபிஐ(எம்) மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியே வெளிப்படுத்தி உள்ளார்.