தென்மேற்குப் பருவ மழை தொடங்கி கேரளாவில் பெய்த கன மழையால், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசர்கோடு, கண்ணூர், பாலக்காடு, வயநாடு, திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேறோடு சாய்க்கப்பட்டும், ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
கேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு! - ராகுல் காந்தி
திருவனந்தனபுரம்: கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளத்தில் வீடுகளை இழந்த சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அம்மாநில அரசு அமைத்துள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாமகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை கிடைத்த தகவலின்படி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 68ஆக உயிரிந்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படைகள், காவல்துறை, தீயணைப்புப் படை உள்ளிட்டோரின் உதவியோடு மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான வயநாடு தொகுதியை பார்வையிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக இன்று கேரளா வந்தடைந்தார். அத்தொகுதி மக்கள் நலன் குறித்தும், அங்கு ஏற்பாடு செய்யபட்டிருக்கும் முகாம்கள் குறித்தும் ஆய்வை மேற்கொள்ள இருக்கிறார்.