மலையாள திரைத் துறையில் அடூர் பாசியின் படங்களில் உதவி தயாரிப்பாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் விஜயன் பிள்ளை. சினிமாவில் பேரும் புகழும் பெற்ற இவர், தற்போது விவசாயத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார். கேரளாவில் உள்ள மேற்கு கல்லடாவின் கொல்லம் மாவட்டத்தில் தனது வீட்டின் பின்புறத்தில் பெரிய அழகான காய்கறித் தோட்டத்தை உருவாக்கியுள்ளார்.
விஜயனுடைய தோட்டத்தில் பீன்ஸ், பூசணிக்காய், கேரட், வெண்டைக்காய், தக்காளி, பலவகை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. அதில் சில காய்கறிகள் பாரம்பரிய முறைப்படி பயிரிடப்படுகின்றன. சிலவகை காய்கள் ஹைட்ரோபோனிக் தொழில்நுட்பத்தில் விளைவிக்கப்படுகிறது. மேலும், உயர் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி சிலவகை தாவரங்கள் மண்ணில் வளர்க்கப்படாமல், தண்ணீரில் வளர்க்கப்படுகின்றன.