தமிழ்நாடு

tamil nadu

கேரள யானை உயிரிழப்பு; குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

By

Published : Jun 6, 2020, 10:26 AM IST

திருவனந்தபுரம்: காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவே தேங்காய் உள்ளிட்ட உணவுப்பொருட்களில் வெடிவைத்ததாக கர்பிணி யானை உயிரிழந்த விவகாரத்தில் கைதான குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

http://10.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/06-June-2020/7496793_315_7496793_1591407327257.png
http://10.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/06-June-2020/7496793_315_7496793_1591407327257.png

கேரளாவில் கர்பிணி யானை வெடிபொருள் வைத்திருந்த பழத்தை சாப்பிட்டு உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் வில்சன் என்ற நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், காவல்துறை வில்சனின் ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அதில், காட்டுப்பன்றிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்தும் விதமாக தேங்காய் உள்ளிட்ட உணவு பொருட்களில் வெடிவைப்பது வழக்கம் எனத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், காட்டு விலங்குளை வேட்டையாடி அதன் மாமிசங்களை விற்கும் செயலில் இவர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, வில்சன் மீது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் சம்பந்தப்பட்ட எஸ்டேட்டின் உரிமையாளர் அப்துல் கரீம் மற்றும் ரியாஸுதின் ஆகியோரை தேடிவருகின்றார்.

இதையும் படிங்க:எல்லை விவகாரம் : இந்திய சீன ராணுவ துணை தளபதிகள் இன்று பேச்சுவார்த்தை

ABOUT THE AUTHOR

...view details