1985ஆம் ஆண்டு தேர்ச்சிப் பெற்று பணியமர்த்தப்பட்ட குழுவைச் சேர்ந்தவர் ஐபிஎஸ் அலுவலர் ஜேக்கப் தாமஸ். இவர் தனது அலுவலகப் பணிகளின் கடைசி நாளான நேற்று, அலுவலகத்தின் தரையிலிருந்த அவரின் படுக்கை விரிப்பில் தூங்கி புகைப்படம் எடுத்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
"கடைசி நாளின் தொடக்கம், அலுவலக அறையில் தூங்கத் தொடங்குகிறேன்" எனத் தெரிவித்து அவர் அந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். இது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அரசை பகிரங்கமாக எதிர்த்த தாமஸ், தற்போதைய பதவிக்கு வருவதற்கு முன், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், தனது 35 ஆண்டுகால பணி வாழ்க்கை முழுவதும் தாமஸ் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டே வந்தார்.
விரைவில் கல்வி ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட உள்ள தாமஸ், அரசியலில் ஈடுபடத் திட்டம் வகுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக மக்களவைத் தேர்தலில் அவர் தன்னிச்சையாகப் போட்டியிட இருப்பதாகச் செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :'புகையிலை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்' - ஹர்ஷ் வர்தன்