தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பறவைக் காய்ச்சல்: மாநிலப் பேரிடராக அறிவித்தது கேரள அரசு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவல் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அதனை மாநிலப் பேரிடராக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பறவை காய்ச்சல்
பறவை காய்ச்சல்

By

Published : Jan 5, 2021, 3:21 PM IST

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தின் கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அதனை மாநிலப் பேரிடராக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், இவ்விரு மாவட்ட நிர்வாகங்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து முழு விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவின் நெடுமுடி, பள்ளிப்பட்டு, ஆலப்புழா, கருவட்டா, நீண்டூர், கோட்டயம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட பறவைகளின் மாதிரிகளை போபால் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வுசெய்ததில், பறவைக் காய்ச்சல் பரவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஹெச்5என்8 என்ற வகை வைரசால் இந்தப் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில கால்நடைத் துறை பராமரிப்பு மற்றும் வனத் துறை அமைச்சர் கே. ராஜு கூறுகையில், "இந்த பறவைக் காய்ச்சலின் ஹெச்5என்8 வைரஸ் பொதுவாக மனிதர்களுக்குப் பரவாது. இருப்பினும் அதனை உறுதியாகக் கூற முடியாது.

பறவைக் காய்ச்சல் மேலும் பிற பகுதிகளுக்குப் பரவாமல் இருக்க, வைரஸ் பரவல் உறுதிசெய்யப்பட்ட ஒரு சதுர கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அனைத்துப் பறவைகளையும் கொல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அதன்படி சுமார் 48 ஆயிரம் பறவைகள் கொல்லப்படவுள்ளன. இதனால் ஏற்படும் இழப்பீட்டுத் தொகை கோழிப்பண்ணை மற்றும் பறவைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் "என்றார்.

இதையும் படிங்க:நாட்டின் எரிவாயு தேவையை நிறைவேற்ற பன்முகத் திட்டங்கள்: பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details