மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 'பாரத் பந்த்' என்ற முழு அடைப்புப் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (Centre of Indian Trade Unions), இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (Indian National Trade Union Congress) உள்ளிட்ட பல மத்திய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் ரயில் மறியலில் ஈடுபட்டதில் ரயில் சேவை முடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தப் போராட்டம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், " நான் இந்தப் போராட்டத்தை முழுவதுமாக ஆதரிக்கிறேன். ஆனால், போராட்டம் ஜனநாயக முறையிலும் அமைதியான முறையிலும் நடக்க வேண்டும். பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.