இந்தியாவில் முதல்முறையாக கரோனா அச்சுறுத்தல் தலையெடுத்தது கேரள மாநிலத்தில்தான். கரோனாவை சிறப்பான நடவடிக்கைகளால் கையாண்டு முன்மாதிரியாகத் திகழ்வதும் அதே மாநிலம்தான். சுகாதாரத் துறை, மருத்துவர்கள், செவிலியர் என அனைவரின் ஒத்துழைப்பும் கரோனாவின் தாக்கத்தை மெள்ள மெள்ள குறைத்தது என நெகிழ்ச்சியுடன் அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்தார்.
கரோனாவும் கேரளாவும்
கேரளாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துடன் (பிபிசி) பகிர்ந்துகொண்டார்.
கரோனாவுக்கு எதிராகப் போராடும் கேரளாவின் வெற்றிக்கதை அப்போது அவர் பேசியதாவது, "சீனாவில் கரோனாவின் தாக்கம் அதிகரிக்கும்போது, கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு நோயின் அடிப்படையில் தரம் பிரித்து சிகிச்சையளிக்கப்பட்டது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட அறைகள், கரோனா பரிசோதனை முகாம் ஆகியவை அமைக்கப்பட்டன.
விமானம், கப்பல் மூலம் வெளிநாடுகளிலிருந்து கேரளா வருபவர்கள், வெளிமாநிலங்களிலிருந்து வரும் நபர்களைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கரோனா அறிகுறி உடையவர்களை உடனடியாகத் தனிமைப்படுத்தி தனிக்கவனம் கொடுக்கப்பட்டது. இதுவே கரோனாவுக்கு எதிராக கேரள மாநிலம் எடுத்த நடவடிக்கைகளின் முக்கிய அங்கம் என சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்தார். குறிப்பாக, கேரள மாநிலம் உலக நாடுகளுக்குச் சிறந்த முன்னோடி எனவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கீழடி அகழாய்வுப் பணிகள் விரைவில் தொடங்கும்!