'மூன்று நாள்கள் பிரமாண்ட விழா', 'வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் வீடுகள்' 'பிரமாண்ட ஸ்பீக்கர்ஸ்' 'கறி விருந்து' 'குடும்பத்தினர் வருகை' எனக் காட்சி தரும் திருமண வீடுகள் தற்போது களை இழந்துபோகியுள்ளன. கல்யாணம் என்று சொன்ன போதும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் முதல் ஆளாக நண்பர்கள், உறவினர்கள் வந்து நிற்பார்கள். இத்தகைய விழாவை, கரோனா ஒரு நிமிடத்தில் மாற்றிக்காட்டியுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டான திருமணம் தான் புனேவில் நடைபெற்றுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த விக்னேஷ், அஞ்சலி ஆகிய இருவரும் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கமானது, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதை முறையாக இரு வீட்டாரின் பெற்றோர்களுக்கும் தெரிவித்து திருமணத்திற்குச் சம்மதம் வாங்கினர்.
அதன்படி, 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்த இவர்களின் திருமணத்திற்காக சுமார் ஒரு ஆண்டுகளாக அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இச்சமயத்தில் தான், கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. கரோனா வைரஸின் தலைநகரமாக இருக்கும் மகாராஷ்டிராவில் விக்னேஷ்-அஞ்சலி ஜோடி, சிக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நி்லை ஏற்பட்டது. லாக்டவுன் முடியும் முடியும் என எதிர்பார்த்த காதல் ஜோடிக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது.