தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதியுங்கள்- பினராயி விஜயன்! - கரிப்பூர் விமான விபத்து

திருவனந்தபுரம்: கரோனா வைரஸ், வெள்ளம் ஆகியவற்றால் அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்துவரும் இந்த வேளையில், மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் என, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

kerala-cm-urges-pm-to-allow-states-to-use-funds-unconditionally-from-sdrf
kerala-cm-urges-pm-to-allow-states-to-use-funds-unconditionally-from-sdrf

By

Published : Aug 11, 2020, 9:05 PM IST

பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பினராயி விஜயன், தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவை மாநிலம் எதிர்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, கரோனா பரவல் அதிகரிப்பு, நிலச்சரிவு, விமான விபத்து என, மாநிலம் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதிக்கான 25 விழுக்காடு வரம்பு நிபந்தனையை தளர்த்தி அந்தந்த மாநிலங்கள் பேரிடர் நிதியை பயன்படுத்த, மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கூறிய அவர்," கரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் ஆகியவை அமைக்கப்பட்டதால் மாநிலங்கள் பல நிதிச் சுமையை எதிர்கொண்டுள்ளன.

எனவே, இந்த செலவினத்தைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு அனைத்து உதவிகளையும் மாநிலங்களுக்கு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில் மாநிலத்தில் வெள்ள சேதமும் ஏற்பட்டுள்ளது. தற்போதைய பருவமழை மாநிலத்தின் பொருளாதார நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த விரிவான அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமரிடம் தெரிவித்துள்ளேன். மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை சமாளிக்க, 10 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை (என்.டி.ஆர்.எஃப்) கேரளாவுக்கு அனுப்பிய பிரதமருக்கு நன்றி. இடுக்கி ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கரிப்பூர் விமான விபத்து ஆகியவற்றிலிருந்து மக்களைக் காக்க உதவியதற்கும் நன்றி. தற்போதைய பருவமழையின் தீவிரத்தினால், கேரளா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பேரழிவுகளை சந்தித்து வருகிறது. சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதுடன், பலத்த மழையைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

கோட்டயம், பதனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், வயநாடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்கள் அதிகளவு பாதிப்பை சந்தித்துள்ளன. கரோனா வைரஸ் நெறிமுறைகளுக்கு இணங்க, ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 686 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆறாயிரத்து, 967 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 22 ஆயிரத்து, 830 பேர் அந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அணைகளில் உள்ள நீர்மட்டம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மக்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக, தமிழ்நாட்டின் வைகை அணைக்கு முடிந்தவரை தண்ணீர் அனுப்பவும், முல்லைப் பெரியாறு அணைக்கு கீழே பாயும் நீரின் அளவைக் குறைக்கவும், மாநில தலைமைச் செயலாளர் தமிழ்நாட்டில் உள்ள கேரள பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க பம்பா ஆற்றில் குவிந்திருக்கும் மண்ணை அகற்றி நீரோட்டத்தை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன” இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details