பருவ மழையின்போது ஏற்பட்ட கடும் வெள்ளத்தின் காரணமாக கேரளாவின் பல்வேறுப் பகுதிகள், கடந்த செப்டம்பர் மாதத்தின் போது வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக ஆலப்புழா பகுதி கடும் பாதிப்பிற்குள்ளான நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான புனரமைப்புப் பணியில் ராமோஜி குழுமம் ஈடுபட்டது.
'குடும்பஸ்ரீ' என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 121 குடும்பங்களுக்கு, வீடு கட்டும் பணியை ராமோஜி குழுமம் மேற்கொண்டது. 40 நாட்களுக்குள் 121 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 8ஆம் தேதி இந்த வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன.