செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "வழக்கமாக இயக்கப்படும் ராஜதானி ரயில்களின் நிறுத்தங்களைவிட தற்போது இயக்கப்படும் சிறப்பு ராஜதானி ரயில்களின் நிறுத்தங்களை அதிகரிக்க நாங்கள் கோரிக்கைவிடுத்துள்ளோம்.
கேரளாவில் தற்போது மூன்று நிறுத்தங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் வட மாவட்ட மக்கள் கர்நாடக மாநிலம் மங்களூருவில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு ஏதுவாக அங்கு நிறுத்தங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
அதே நேரத்தில், பயணிகள் கரோனாவால் பாதிக்கப்படும் இடரைத் தவிர்க்கும்வகையில், ரயில்கள் மாநிலத்திற்குள் (கேரளா) நுழையும் முன் இடைவிடாது இயக்கவும் மற்ற மாநிலங்களில் ரயில்கள் நிறுத்துவதைத் தவிர்க்கும்படியும் நாங்கள் கோரியுள்ளோம்.
அவர்களை மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்த ரயில் நிலையங்களில் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் வீடுகளிலேயே தங்களைக் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.