தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாணவர் அமைப்பின் தலைவரை கரம்பிடிக்கும் பினராயி மகள்! - Kerala wedding

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு, இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் (DYFI) தேசிய தலைவர் முகமது ரியாஸுடன் ஜூன் 15ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது.

Pinarayi daughter marriage
Pinarayi daughter marriage

By

Published : Jun 11, 2020, 2:37 AM IST

Updated : Jun 11, 2020, 11:41 AM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரியாஸ், இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) உடன் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பிறகு இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பின்பு , அவர் 2009ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக நின்று தோல்வியைத் தழுவினார். கேரள முதலமைச்சர் மகளான வீணா பெங்களூருவில் ஐடி (IT) ஒன்றில் எம்.டி. பதவியில் உள்ளார்.

இவர்கள் இருவருக்கும் வரும் ஜூன் 15ஆம் தேதி அன்று அவர்களின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Last Updated : Jun 11, 2020, 11:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details