சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்காக இடம் இறுதி செய்யப்படுவதற்கு முன்பே 2017ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனத்தை அத்திட்டத்தின் ஆலோசகராக நியமித்திருப்பதாக கேரள அரசு மீது அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சென்னிதாலா குற்றஞ்சாட்டியிருந்தார்.
"ஒரு வெளிப்படையான நடைமுறைய பின்பற்றிதான் ஆலோசகர் நியமிக்கப்பட்டார். இறுதி செய்யப்பட்ட பட்டியலில் மூன்று நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. நிபுணர்கள், அரசு அலுவலர்களால் மதிப்பிடப்பட்டு அதிக தொழில்நுட்ப தகுதிகளின் அடிப்படையில் அமெரிக்க நிறுவனம் அத்திட்டத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டது" என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கமளித்துள்ளார்.
விமான நிலையம் அமையவுள்ள இடம் அரசுக்குச் சொந்தமானது என அரசாங்கம் நம்புவதாக தெரிவித்த பினராயி விஜயன், ஜூன் 18 ஆம் தேதி விமான நிலையம் அமைப்பதற்காக 2ஆயிரத்து 263 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்தார்.