இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் மாநில எல்லைகளுக்குள் வருவதற்கு முன்னால் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரசால் அந்தந்த மாநிலங்கள் அதன் மாநில எல்லைகளை அடைத்துவருகின்றன. இதனால் கேரளாவுக்கு வரும் அத்தியாவசிய பொருள்களின் லாரிகள் வருவதற்கு வெகு நேரமாகிறது. இதனைச் சரிசெய்ய கேரள நீர் மேலாண்மை துறை அமைச்சர் இன்று தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்திக்கவுள்ளார். அதில், நடுபல்லி சோதனைச்சாவடி விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்வார்கள்.
ஆனால் மலப்புரத்தில் உள்ள மக்களுக்கு மருத்துவச் சாதனங்கள், அத்தியாவசிய பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டுவருவதற்கு கர்நாடக அரசு அனுமதிக்க வேண்டும். இது குறித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பாவிடம் பேச தொடர்புகொண்டோம். ஆனால் அவரிடம் பேச முடியவில்லை. இதனால் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றுள்ளோம்.