தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் ஆளுநர் மீது  வழக்குப்பதிவு! - கேரள காவல்துறையினர்

திருவனந்தபுரம்: பண மோசடி வழக்கில் மிசோரம் மாநில முனனாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான கும்மனம் ராஜசேகரன் மீது கேரள காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் ஆளுநர் மீது கேரள காவல்துறை வழக்குப்பதிவு!
முன்னாள் ஆளுநர் மீது கேரள காவல்துறை வழக்குப்பதிவு!

By

Published : Oct 23, 2020, 1:37 PM IST

மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், பாஜக தலைவருமான கும்மனம் ராஜசேகரன் மீது கேரள மாநில ஆரண்முலா காவல் துறையினர் பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாலக்காட்டில் ஒரு நிறுவனத்தை அமைப்பதற்கான கூட்டு ஒப்பந்தமாக 2018ஆம் ஆண்டில் கும்மனம் ராஜசேகரன் உள்ளிட்ட எட்டு பேர், அவரிடமிருந்து ரூ. 28.75 லட்சத்தை மோசடி செய்ததாகக் கூறி ஹரிகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் ராஜசேகரனின் தனிப்பட்ட உதவியாளர் பிரவீன் வி பிள்ளை பெயர் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. விஜயன், மற்ற இருவரின் மீதும் மோசடி செய்த குற்றத்தின் கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details