மத்திய அரசு அறிவித்த நான்காம் கட்ட ஊரடங்கில், பல மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், கேரளாவில் மட்டும் மதுபானக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. இருப்பினும் மதுபானம் கடத்தல் அதிகரிக்கும் காரணத்தினாலும், மதுபானக் கடைகளுக்கு முன்பு கூட்டத்தை தவிர்க்கவும் ஆன்லைனில் மதுபானம் விற்க முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக, கேரள அரசு Bev Q செயலியை உருவாக்கியுள்ளது. இச்செயலியில் டோக்கன் பெறும் மக்கள் குறிப்பிட்ட கடைக்கு சென்று மது வாங்கிக் கொள்ளலாம். காலை 9 முதல் மாலை 5 மணி வரை மது விற்பனை நடைபெறும் என்றும், பார்களில் பார்சல் மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.