தமிழ்நாடு

tamil nadu

கேரளாவில் தந்தையால் தாக்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

திருவனந்தபுரம்: கடந்த மாதம் தந்தை தூக்கி வீசியதில் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சையிலிருந்த குழந்தை பூரணமாக குணமடைந்து காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

By

Published : Jul 7, 2020, 1:06 AM IST

Published : Jul 7, 2020, 1:06 AM IST

baby
baby

கடந்த ஜூன் 17ஆம் தேதி கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷைஜு தாமஸ், மனைவி மீதான சந்தேகத்தில் பிறந்த 54 நாள்கள் மட்டுமே ஆகியுள்ள தனது குழந்தை தூக்கி வீசி துன்புறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மனைவி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் தாமஸை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். பலத்த காயமடைந்த குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

இந்நிலையில், குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் கோலஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டது.

தற்போது, குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் பூரண குணமடைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலக்குழு அமைப்பை சேர்ந்த மஞ்சுலா, குணமடைந்த குழந்தையை சினேகா ஜோதி குழந்தை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார். அப்போது, மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ்.அருண்குமார், மாநில குழந்தைகள் நலத்துறை மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ்.அருண்குமார், மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் ஷிஜி சிவாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக பேசிய அருண்குமார், " குழந்தையின் தாயார் சொந்த நாடான நேபாளத்திற்கு செல்ல விரும்புகிறார். தாயின் விருப்பத்தை மாநில அரசு பரிசீலிப்பது மட்டுமின்றி குழந்தையின் அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு தேவையான அனைத்து செலவுகளையும் ஏற்றக்கொள்ளும்" என்றார்.

இதையும் படிங்க: தனியார் ஸ்டீல் நிறுவனம் எஸ்பிஐ வங்கியில் மோசடி? சிபிஐ அதிரடி சோதனை

ABOUT THE AUTHOR

...view details