தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சட்டப்பேரவையைக் கூட்டுமாறு ஆளுநருக்கு கேரள அரசு பரிந்துரை! - முதலமைச்சர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம் : கேரள சட்டப்பேரவையை ஜனவரி 8ஆம் தேதியன்று கூட்டுமாறு ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.

சட்டப்பேரவையைக் கூட்டுமாறு ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ள கேரள அரசு!
சட்டப்பேரவையைக் கூட்டுமாறு ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ள கேரள அரசு!

By

Published : Jan 1, 2021, 10:19 PM IST

திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கேரள மாநில தலைமைச் செயலகத்தில் இன்று (ஜன.1) சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கேரள சட்டப்பேரவையின் கூட்டத்தொடரை ஜனவரி 8ஆம் தேதியன்று கூட்ட முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையை ஜனவரி 8ஆம் தேதியன்று கூட்டுமாறு அதிகாரப்பூர்வமான பரிந்துரையை ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு அமைச்சரவை அனுப்பியுள்ளது.

ஜனவரி 8ஆம் தேதி தொடங்கும் அமர்வு 28ஆம் தேதி வரை தொடருமென கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடர் கேரளாவில் நடைபெற்றுவரும் 14ஆவது சட்டப்பேரவையின் 21ஆவது அமர்வாக அமையவிருக்கிறது.

சட்டப்பேரவையைக் கூட்டுமாறு ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ள கேரள அரசு!

மாநிலத்தை ஆளும் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அரசின் கடைசி மாநில வரவு செலவுத் திட்ட அறிக்கை ஜனவரி 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

விமான தங்கக் கடத்தல், லைஃப் வீடுகள் திட்டம் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தொடரில் கேள்விகளை எழுப்பலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த நட்டா!

ABOUT THE AUTHOR

...view details