ஏப்ரல் 20ஆம் தேதிமுதல் மாநில அரசுகள், அங்குள்ள கரோனா சூழலைப் பொறுத்து ஊரடங்கில் தளர்வை அறிவித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மாநிலத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
“கேரளாவில் 14 மாவட்டங்கள் பச்சை, ஆரஞ்சு ஏ, ஆரஞ்சு பி , சிவப்பு என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பச்சை மண்டலம் என வகைப்படுத்தப்பட்ட இடுக்கி, கோட்டயம் மாவட்டங்கள் அரசின் உத்தரவின் விதிகளைக் கடைப்பிடித்து இயல்பாகச் செயல்படலாம்.
ஆரஞ்சு பி மண்டலத்தில் ஆலப்புழா, திருவனந்தபுரம், பாலக்காடு, திரிசூர், வயநாடு ஆகிய மாவட்டங்கள் அடங்கும். இங்கு சில நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த இரண்டு மண்டலங்களிலும், கடைகள், உணவகங்கள், அலுவலகங்கள் திறக்கப்படும். திருமணங்கள், இறுதிச்சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும்.