ஷார்ஜாவிலிருந்து நேற்றிரவு கொச்சி வந்த விமானத்தில் பயணித்தவர்களை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை செய்தனர். இதில் 657 கிராம் கடத்தல் தங்கம் இருப்பதை அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.
கொச்சியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!
கொச்சி: ஷார்ஜாவிலிருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.30.55 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவினர் பறிமுதல்செய்தனர்.
தங்கம்
இதையடுத்து தங்கத்தை மறைத்து எடுத்துவந்த நபரை அலுவலர்கள் கைதுசெய்து விசாரணை நடத்திவருவதாக சுங்க ஆணையரகம் தெரிவித்துள்ளது. கடத்திவரப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.30.55 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.