வரும் பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.
'இலவச மின்சாரம், குடிநீர்... ' - தேர்தல் அறிக்கை மூலம் கவனம் ஈர்த்த கெஜ்ரிவால் - கேஜிரிவால் தேர்தல் அறிக்கை
டெல்லி: இலவச கல்வி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட 10 அம்ச உறுதித்திட்டத்தை தனது தேர்தல் அறிக்கையாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
AAP
கெஜ்ரிவாலின் உறுதித் திட்டம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவற்றை நிறைவேற்றுவேன் எனக் கூறி 10 உறுதி மொழிகள் அளிக்கப்பட்டுள்ளன.
- டெல்லிவாசிகள் அனைவருக்கும் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் 200 யூனிட்கள் இலவசமாகத் தரப்படும்.
- அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேரம் குழாய் மூலம் குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.
- டெல்லியில் உள்ள குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி இலவசமாக அளிக்கப்படும்.
- டெல்லி நகரில் 11 ஆயிரம் பேருந்துகள், 500 கி.மீ மெட்ரோ இயக்கம் என பெரும்பான்மையானவற்றில் குறைந்த விலையில் போக்குவரத்து வசதி மேற்கொள்ளப்படும்.
- டெல்லியில் ஓடும் யமுனை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்படும்.
- பெண்கள் பாதுகாப்புக்காக பெண்கள் பாதுகாப்புப் படை தனியாக அளிக்கப்படும்.
- அதிகரித்துவரும் குப்பை சிக்கலை மேம்படுத்துவதற்காக சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த ஐந்தாண்டுகளில் குப்பையற்ற நகரமாக டெல்லி மாற்றப்படும்.
- டெல்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளில் முறையான சாலை, குடிநீர், வடிகால் வசதிகள் செய்து தரப்படும்.
- வயர்கள், கேபிள்கள் ஆகியவற்றை தரைவழி இணைப்பாக முற்றிலும் மாற்றி அமைத்துத் தரப்படும்.
- குடிசைப் பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக நல்ல வீடு கட்டித் தரப்படும்.
இதையும் படிங்க: புத்தகக் கண்காட்சியை மிஞ்சும் சாலையோர புத்தகக்கடைகள்!